Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்கள் சொந்த ஊர் சென்று தங்களது வாக்கை பதிவு செய்ய வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21, 22 மற்றும் 23-ந்தேதி மதியம் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகள் மற்றும் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b