முதுநிலைப் படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.) 2026-27-ஆம் கல்வியாண்டு முதுநிலைப் படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 16
TANCET and CEETA entrance exams


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

2026-27-ஆம் கல்வியாண்டு முதுநிலைப் படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 16ம் தேதி டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடைசி தேதி ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.அந்த வகையில் நாளையுடன்

(ஏப்ரல் 15) இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு பெறுகிறது.

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.annauniv.edu) பயன்படுத்தி நாளை (ஏப்ரல் 15 வரை) விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, டான்செட் நுழைவுத்தேர்வு

மே 9ம் தேதியும், சீட்டா நுழைவுத்தேர்வு மே 10ம் தேதியும் நடைபெற உள்ளன.

Hindusthan Samachar / vidya.b