Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இதன்படி, பெருமாநல்லூர் முதல் பூலுவபட்டி பிரிவு வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தின் மூலம் பிரசாரம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.
பிரசாரத்தின் போது, விஜய் பயணிக்கும் வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்தவித வாகனங்களிலும் யாரும் பின்தொடரக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணைய விதிமுறைகளை முறையாக பின்பற்றவும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே திரளாமல் இருக்கவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் பங்கேற்பதை தவிர்த்து, சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகள் மூலம் நிகழ்ச்சியை காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ