தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை, 14 ஏப்ரல் (ஹி.ச.) திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பட்டாட்சியர் பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள
Bootha Narayanan


திருவண்ணாமலை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பட்டாட்சியர் பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து பல்வேறு வகையான பழ வகைகளை மாலைகளாக அணிவித்த பின்னர் விஷுக்கனி அலங்காரத்தில் பூத நாராயண பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூத நாராயண பெருமாளை கோவிந்தா கோவிந்தா என்று பக்தியுடன் வழிபட்டனர்.

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பூத நாராயண பெருமாளுக்கு பட்டாட்சியர் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலர் மாலை அணிவித்து தீபாரதனை நடைபெறுவது வழக்கம், அதன்படி இன்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பூத நாராயண பெருமாளுக்கு பட்டாட்சியர் அதிகாலை அரிசி மாவு, சீயக்காய் தூள், மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர்.

பின்னர் மலர் மாலை மற்றும் மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு சாத்துக்குடி, கொய்யா, எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பல வகையான பழ வகைகளால் மாலைகள் அணிவித்து பைனாப்பிள் கிரீடத்துடன் விஷுக்கனி அலங்காரத்தில் ஸ்ரீ பூத நாராயண பெருமாள் எழுந்தருள நட்சத்திர ஆரத்தையும் மகா கற்பூர ஆரத்தியும் வெகு விமர்சையாக நடைபெற்றது, தமிழ் வருடப்பிறப்பு தினமான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று பக்தியுடன் பெருமாளை வழிபட்டு சென்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN