Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள் திரை பிரபலங்கள் தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த இசையமைப்பாளர் இளையராஜா சம்மந்த விநாயகர் சன்னதியில் தரிசனம் செய்து அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை வழிபட்டார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினர், அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN