Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 14 ஏப்ரல் (ஹி.ச.)
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
வேப்பூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், விளம்ப ஊர், கீழக்குறிச்சி, மாளிகைமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று திமுக, விசிக மற்றும் தனது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆதரவாளர்களோடு முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பரப்புரையின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதி தங்களது வாழ்க்கையின் ஒன்றிணைந்த ஒன்றாக பார்த்து வருகிறோம் என்றும் தான் வெற்றி பெற்ற பிறகு கிராம மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவேன் என்றும் உறுதி கூறினார்.
தொடர்ந்து தேர்தல் பரப்புரை வாகனத்தில் அமர்ந்தும் திறந்தவெளியில் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P