பாஜகவை வெற்றி பெற வைப்பதே விஜயின் நோக்கம் - திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.) தவெக தலைவர் விஜயை குறிவைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை
திருமாவளவன்


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

தவெக தலைவர் விஜயை குறிவைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் நிலையில், தங்களுக்கு எதிராக அதிமுக - பாஜக கூட்டணியை தான் பார்ப்பதாகவும் இந்த இரண்டு கூட்டணிகளுக்கும், அணிகளுக்கும் இடையில் தான் போட்டி எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுகவுக்கு இடையிலான போட்டி என்று இதனை தாங்கள் பார்க்கவில்லை என்ற அவர், தமிழ்நாட்டு மக்களுக்கும், சங்பரிவார் அரசியல் பேசும் சக்திகளுக்கு இடையில் நடக்கும் மக்கள் யுத்தமாக தான் இந்த தேர்தலை பார்ப்பதாகவும் கூறினார். ஆனால் திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமான வேலைகளை விஜய் செய்கிறார் என்பது தங்களுடைய யூகம் என்றும் இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாது என்பது தெரிந்தும் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் இது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு உதவியாக இருக்கிறது எனவும் சாடினார் .

இதன் காரணமாக தான் விஜய்யின் அரசியலை அடையாளம் காட்டி அம்பலப்படுத்துவதாகவும் இந்த தேர்தலில் தனக்கு வாய்ப்பில்லை என்பது தெரிந்தும் திமுகவை அப்புறப்படுத்துவோம் என்பதன் மூலம் பாஜக - அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவது தான் அவருடைய நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது எனவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P