Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம் பகுதியில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் யார்டு பணிகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இதன்படி, மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் – அரக்கோணம் மின்சார ரயில் சேவை திருவாலங்காடு – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திருத்தணி – மூர் மார்க்கெட் மின்ரயில் சேவை திருத்தணி – திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், இரவு நேரத்தில் இயக்கப்படும் சில MEMU ரயில்களும் திருவாலங்காடு – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை என்றும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் வழக்கமான சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன் ரயில் அட்டவணையை சரிபார்த்து மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P