கணியூர் சுங்கச்சாவடியில் தவெக தலைவர் விஜய்யை வரவேற்ற சூலூர் தவெக வேட்பாளர் திடீரென மயங்கியதால் பரபரப்பு
திருப்பூர், 14 ஏப்ரல் (ஹி.ச.) தவெக தலைவர் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைக்காக கோவைக்கு சிறப்பு விமானத்தில் வந்திருந்தார். அங்கிருந்து பிரச்சார வாகனம் மூலம் திருப்பூருக்கு
விஜய்


திருப்பூர், 14 ஏப்ரல் (ஹி.ச.)

தவெக தலைவர் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைக்காக கோவைக்கு சிறப்பு விமானத்தில் வந்திருந்தார்.

அங்கிருந்து பிரச்சார வாகனம் மூலம் திருப்பூருக்கு சென்று கொண்டுள்ளார்.இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமார் கணியூர் சுங்கச்சாவடியில் தவெக தலைவர் விஜய்க்கு தனது ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்து சுமார் ஒன்றரை மணிநேரம் வெயிலில் காத்திருந்தார்.

பின்னர்,விஜய் வந்த சமயம் வரவேற்பு அளிக்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சூலூர் தவெக வேட்பாளர் சுகுமார் திடீரென மயங்கினார்.

இதனையடுத்து, அவரது ஆதரவாளர்கள் உடனடியாக மீட்டு சாலையோரம் தண்ணீரை முகத்தில் தெளித்து ஆசுவாசப்படுத்தினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam