Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 14 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் முக்கிய பேச்சாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அப்படி பிரச்சாரத்திற்கு வரும் இவர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு சோதனைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உதகை காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காகதெலுங்கானா மாநில நீர்ப்பாசனம், உணவுத்துறை அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை வந்தடைந்தார்.
உதகை தீட்டுக்கள் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கிய ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த ஹெலிகாப்டரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், கார்த்திக் தங்கபாலு ஆகியோர் இருந்த நிலையில் நடைபெற்ற ஹெலிகாப்டர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / GOKILA arumugam