அம்பேத்கர் வழி சமத்துவப் பாதை,திராவிட மாடல் தொடரும்– உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.) இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் இன்று “சமத்துவநாள்” ஆகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கழகத்தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந
Udhaya


Hh


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் இன்று “சமத்துவநாள்” ஆகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை கழகத்தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

அவரது பதிவில்,

என்னைவிட உயர்ந்தவரும் கிடையாது.என்னைவிட தாழ்ந்தவரும் கிடையாது என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளை மேற்கோள் காட்டி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் பணியில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைகளை சீரழிக்க முயல்கின்ற அரசியல் சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க ஆகியவற்றின் தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடித்து, அம்பேத்கர் கனவான சமத்துவ சமூகத்தை உறுதிசெய்யும் “திராவிட மாடல்” அரசு தொடர அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ