விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கை: ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுதல். மருத்துவத்தை அடிப்படை உரிமையா
Viduthalai Chiruthaigal Katchi Releases Election Manifesto


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கை:

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுதல்.

மருத்துவத்தை அடிப்படை உரிமையாக மாற்றுதல்.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு மூலம் சமூக நீதியை உறுதி செய்தல்.

சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டம்.

மது மற்றும் போதைப்பொருட்களை முழுமையாக ஒழித்தல்.

இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுதல்.

இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்துதல்.

கடல், காடு, கனிம வளங்கள் அனைத்தும் மக்களுக்கே உரியவை என்ற கொள்கை.

விலையில்லா கல்வி.

மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு.

மகளிருக்கு 50% இடஒதுக்கீடு.

உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம்.

காவல் துறை மற்றும் சிறைத் துறையில் சீர்திருத்தம்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அவர் தெரிவித்ததாவது,

கொள்கை நிலைப்பாடுகளை முதன்மையாக வைத்து கொள்கை அறிக்கையாக வெளியிடுகிறோம்.

தேர்தல் நடைபெறும்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவது அப்பட்டமானது.

பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என விசிக வலியுறுத்துகிறது.

16,17,18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. 3 நாட்களும் எதை விவாதிக்கப் போகிறோம் என்பது குறித்து பாஜக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட்டத் தொடரை நடத்துவதால் ஐயம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையை வலியுறுத்துகிறோம்.

தேர்தலின்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவது மரபுக்கு எதிரான நடவடிக்கை.

பாஜகவின் பாசிச நடவடிக்கைக்கு எதிராக எங்களின் நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறோம்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

சிறுபான்மையினரை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

ஆணவக்கொலையை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b