சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - உரிமையாளர் கைது
சாத்தூர், 14 ஏப்ரல் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூர் மினி உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் ம
V


சாத்தூர், 14 ஏப்ரல் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூர் மினி உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. இந்த ஆலையை சிவகாசியை சேர்ந்த கண்ணன் (52) நடத்தி வந்தார்.

நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பல தயாரிப்பு அறைகள் சக்திவாய்ந்த சத்தத்துடன் வெடித்து தரைமட்டமாகின.

வெடிப்பின் தாக்கம் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியும் மேற் கொள்ளப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாதது காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணனை கைது செய்தனர்.

மேலும், விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA