சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் கொள்ளை
விருதுநகர், 14 ஏப்ரல் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ்-ஐ ஆதரித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள்
கொள்ளை


விருதுநகர், 14 ஏப்ரல் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ்-ஐ ஆதரித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் கடற்கரைராஜ் வீட்டின் பின்பு வழியாக நுழைந்து வீட்டின் உள்ளே பிரோவில் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் துறையினர் தகவல் அளித்ததையடுத்து சம்பவம் குறித்த தகவல் அறிந்த சாத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து

சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குருசாமி தலைமையில் நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் வேட்பாளர் வீட்டிலிருந்த 122 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்ததுள்ளது.

இதனையடுத்து சம்பவ நடந்த வீட்டில் கைரேகை நிபுணர் எஸ்.ஐ. சுரேஷ்குமார் மற்றும் மோப்ப நாய் ராணி ஆகியவை வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை கண்டுபிடிக்க தடயங்கள் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கொள்ளைச் சம்பவம் நடந்த வேட்பாளர் வீட்டை விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் ஸ்ரீ நாதா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வேட்பாளர் கடற்கரையின் மருமகள் வத்சலாதேவி (30) கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வீட்டில் இருந்தால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து திருட்டு கும்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Hindusthan Samachar / VINOTH KUMAR P