செங்கல்பட்டு அருகே ராக்கெட் லாஞ்சர் வெடித்து கல்லூரி மாணவர் பலி - படுகாயம் அடைந்த நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
செங்கல்பட்டு, 14 ஏப்ரல் (ஹி.ச.) செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் இராணுவ துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் உள்ளது. இங்குள்ள மலையில் இராணுவ அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தி பயிற்சியில் ஈடுபடுகின்றனர். வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களை அப்பட
விபத்து


செங்கல்பட்டு, 14 ஏப்ரல் (ஹி.ச.)

செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் இராணுவ துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் உள்ளது. இங்குள்ள மலையில் இராணுவ அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தி பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களை அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

அப்போது பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி டெக் நான்காம் ஆண்டு படித்து வரும் ஆறு மாணவர்கள் கூகுள் மேப் மூலமாக டிரெக்கிங் செய்ய இடம் தேடிய போது அனுமந்தபுரத்திலுள்ள ராணுவ துப்பாக்கி சூடு பயிற்சி மையம் அருகே உள்ள மலையை பார்த்து உள்ளனர்.

அதன்படி, இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் பெங்களூருவை சார்ந்த யமான்சூ யாதவ் (21), ஹைதராபாத்தை சேர்ந்த விஷால் (21), உத்திரபிரதேசத்தை சார்ந்த ஆரியன் சர்மா (21), ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கிருஷ்ணா (21), புதுடெல்லியைச் சேர்ந்த நிஷ்காஷ் (21) மற்றும் மீரட்டை சேர்ந்த விராட் (23) ஆகியோர் மலை மீது ஏறி உள்ளனர்.

தொடர்ந்து மலையில் இருந்து கீழே இறங்கும்போது ராணுவத்தினரால் கைவிடப்பட்ட ராக்கெட் லாஞ்சர் மீது யமான்சூ யாதவ் கால் பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ராக்கெட் லான்சர் வெடித்ததில் யமான்சு யாதவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடன் நடந்து வந்த விஷால், ஆரியன் சர்மா, கிருஷ்ணா மற்றும் நிஷ்காஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயம் அடையாத விராட் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த நான்கு பேரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் தாம்பரம் துணை ஆணையர், கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் உள்ளிட்டோர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அனுமந்தபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து தடையவியல் துறை மற்றும் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் அங்கு சிதறி கிடந்த வெடிகுண்டு துகள்கள் மற்றும் ரத்த மாதிரி களையும் சேகரித்தனர் மலை முழுவதும் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டுகள் கிடப்பதால் அப்பகுதியில் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தி வருகின்றனர்

மேலும் பகுதியில் உள்ள கிராமத்தினர் மலை ஓரங்களில் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam