சாத்தூரில் பைக் விபத்தில் சிக்கி ப்ளஸ் 2 மாணவர்கள் மூவர் பலி
விருதுநகர், 15 ஏப்ரல் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாத்தூரிலிருந்து கோவில்பட்டி நோக்கி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் எதிர்திசையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கன்னியாகுமரிய
விபத்து


விருதுநகர், 15 ஏப்ரல் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாத்தூரிலிருந்து கோவில்பட்டி நோக்கி பள்ளி மாணவர்கள் மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் எதிர்திசையில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது

கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து

எதிர்திசையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் 3

பேரும் தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து 3 மானவர்களும் சம்பவ

இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர்

உயிரிழ்ந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது விபத்து குறித்து

தாலுகா காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள் சிவகாசி பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த லிங்கம் என்பவரது மகன்

கோகுல் (17), சிவகாசி டவுன் பகுதியை சேர்ந்த பிரசன்னா (17), சிவகாசி ஹவுசிங்

போர்டு பகுதியை யுவராஜ் (17) என்பதும் அவர்கள் மீது மோதிய ஆம்னி பேருந்து

கன்னியாகுமரியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து என்றும் அதனை ஓட்டி வந்த ஓட்டுநர் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் என்பதும் தெரிய

வந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல்துறையினர்

ஆம்னி பேருந்து ஒட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சாலைவிபத்தில் மாணவர்கள் மூன்று பேர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P