Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி முதல்முறையாக அரசியலில் களம் காண்கின்றார்.
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் புதிய நீதி கட்சி சார்பில் சுந்தர் சி வேட்பாளராக களமிறங்குகிறார்.
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி தனது பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்.
மதுரையின் சிறப்பை கூறி மதுரை மத்தியின் மக்களுக்கு தேவையான விஷயங்களை எடுத்துரைத்து அந்த தொகுதியில் இருக்கும் குறைகளை கூறி சுந்தர் சி பரப்புரை செய்து வருகின்றார்.
மேலும் அந்த தொகுதியில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்வேன் என்றும் கூறி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இயக்குனர் சுந்தர்.சி போட் டியிடுகின்றனர்.
இந்தநிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், எல்லீஸ் நகர் பகுதி கிறிஸ்தவ ஆலயத்துக்குள், இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சால்வையுடன் சுந்தர்.சி சென்று அங்குள்ளவர்களிடம் ஆதரவு கேட்டதுடன், பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, வழிபாட்டு தலங்களுக்கு வெளியேதான் வேட்பாளர் ஆதரவு கேட்க வேண்டும்.
அதை இயக்குனர் சுந்தர்.சி மீறியதாக திமுக வழக்கறிஞர் சுமேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில், சுந்தர்.சி மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b