Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 15 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் அடுத்த வாரம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இன்று (15.04.2026) வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை தெரிவித்துள்ளார்.
பறிமுதல் விபரங்கள்:
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத்தொகை ரூ. 83,93,266/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்களின் மொத்த மதிப்பு ரூ. 5,52,119/- ஆகும்.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆவணங்களின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b