காஞ்சிபுர விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு - 37 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையம் கட்ட முதற்கட்ட பணிகள் தொடக்கம்
காஞ்சிபுரம் , 15 ஏப்ரல் (ஹி.ச.) காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும், ஒரு லட்சம் ஏக்க
காஞ்சிபுர விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு -  37 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையம் கட்ட முதற்கட்ட பணிகள் தொடக்கம்


காஞ்சிபுரம் , 15 ஏப்ரல் (ஹி.ச.)

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

இதில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வாலாஜாபாத் தாலுகா கட்டவாக்கம், கீழ்புத்துார், உத்திரமேரூர் தாலுகா வேடபாளையம், காஞ்சிபுரம் தாலுகா சிறுகாவேரிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சேமிப்பு நிலையத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.

இதில், கட்டவாக்கம் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில், 14.41 கோடி ரூபாய் செலவில் கூரையுடன் கூடிய கட்டடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுதும் இருந்து இந்த சேமிப்பு நிலையத்திற்கு நெல் மூட்டைகள் வருவதால், இட பற்றாக்குறை உள்ளது.

இதனால், திருவண்ணாமலை மாவட்டம், தூசி நெல் சேமிப்பு மையத்தில், காஞ்சிபுரம் மாவட்ட நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், நத்தாநல்லுார் கிராமத்தில் 37 ஏக்கர் பரப்பளவில், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் புதிதாக திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையம் கட்ட உத்தரவிட்டது.

இதையடுத்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், புறம்போக்கு நிலத்தை சுத்தம் செய்து, சமன்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது,

நத்தாநல்லுார் கிராமத்தில், புல எண்: 1/1ல் 37 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலத்தை, பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறோம். இந்த நவரை பருவ நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட உள்ளது.

இதன் வாயிலாக, பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று நெல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டியதில்லை. கூடுதல் நெல் மூட்டைகளை இங்கு அடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b