Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 15 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் ரூ.8,000 கூப்பன் மாதிரி விநியோகித்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சில மாவட்டங்களில் திமுகவினர் வீடு வீடாக ₹8,000 மதிப்புள்ள கூப்பன் மாதிரியை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 127ஆம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய கூப்பன்கள் வழங்கப்படுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டத்தை அடிப்படையாக கொண்டு கூப்பன் மாதிரி அச்சடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி இன்றி விநியோகித்ததாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்க அளிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கூப்பன் மாதிரியை தொலைக்காட்சி விளம்பரங்களில் மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகிக்க அனுமதி இல்லை.
ஆனால் தி.மு.க வீடுகளுக்கு சென்று 8000 மதிப்புள்ள கூப்பன் மாதிரிகளை விநியோகிப்பதாக வந்த புகார் அடிப்படையில்,
திமுகவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam