முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.) நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். இதையடுத்து, முதல்வர் ம
DMK District Secretaries' Meeting


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதால் அவசர ஆலோசனை நடைபெற்றது.

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து திமுக எம்.பிக்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிற்பகல் 12 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் நாளை நடைபெற இருக்கும் கருப்புக் கொடி போராட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b