தொகுதி மறுசீரமைப்பு- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.) நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்கும் நோக்கில், ஒரு புதிய சட்டத் தொகுப்பைக் கொண்டுவர (Constituency Delimitation Bill) நாளை முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையில
ப.சி


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்கும் நோக்கில், ஒரு புதிய சட்டத் தொகுப்பைக் கொண்டுவர (Constituency Delimitation Bill) நாளை முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அமர்வில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா, 2026 தாக்கல் செய்யப்பட உள்ளது. இது 2002-ஆம் ஆண்டுச் சட்டத்தை மாற்றி, புதிய தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தை அமைக்க முன்மொழிகிறது.

இது மக்களவையின் மொத்த பலத்தை தற்போதுள்ள 543-இலிருந்து 850 உறுப்பினர்களாக அதிகரிக்க உத்தேசித்துள்ளது.

இந்நிலையில் தொகுதி மறு வரையறை தொடர்பாக கவலை தெரிவித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது.

மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்

தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்.

அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்.

மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும்.

மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்.

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் என இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P