Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கை, தென் மாநிலங்களுக்கு அநீதி விளைவிக்கும் என அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்குமாறு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க இந்த போராட்டம் அவசியம் என்றும், மத்திய அரசு தனது முடிவை மாற்றாவிட்டால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam