மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது - கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்..!
தமிழ்நாடு, 15 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் அமல்படுத்தப்படும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட இயந்திர மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுகங்
மீனவர்கள்


தமிழ்நாடு, 15 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் அமல்படுத்தப்படும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட இயந்திர மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடைக்காலம் அமல்படுத்தப்படுகின்றது. தடைக்காலத்தில் ட்ராலர்கள் உள்ளிட்ட பெரிய படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சில இடங்களில் சிறிய பாரம்பரிய படகுகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

இந்த மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14 வரை நீடிக்கும் என்றும், கடல் வளத்தை பாதுகாக்க இது அவசியமான நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அவர்களை கணக்கெடுத்து நிவாரண தொகை வழங்கும் பணி தீவிரமாகி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam