தற்கொலை புரியத் தூண்டியிருப்பது தான் திமுகவின் சமூக நீதியா? - ஹெச்.ராஜா கண்டனம்
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.) திமுக வேட்பாளர் சார்பில் கொடுத்த இலவச பரிசுப்பொருள் கிடைக்கவில்லை என கேட்ட பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி தாக்கிய நபர்களால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்
தற்கொலை புரியத் தூண்டியிருப்பது தான் திமுகவின் சமூக நீதியா? - ஹெச்.ராஜா கண்டனம்


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

திமுக வேட்பாளர் சார்பில் கொடுத்த இலவச பரிசுப்பொருள் கிடைக்கவில்லை என கேட்ட பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி தாக்கிய நபர்களால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 கொடுக்கிறேன் என்று பாதி பேருக்கு வழங்காமல் ஏமாற்றியதோடு, ஓசி, ஓசி என்று இழிவுபடுத்திய திமுகவினர், தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் ₹8,000 கூப்பன் மாதிரியை வைத்து, அதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி, திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிரையே பறித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.

தனக்கு ஏன் கூப்பன் மாதிரியை வழங்கவில்லை என்று கேட்டதற்காக ஒரு பட்டியலினப் பெண்ணை ஆபாசமாகப் பேசி தாக்கியதோடு, தற்கொலை புரியத் தூண்டியிருப்பது தான் திமுகவின் சமூக நீதியா? இது தான் பெண்களை முன்னேற்றும் லட்சணமா முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே?

பெண்களின் பாதுகாப்பைத் துச்சமெனத் தூக்கியெறிந்து, ஆளும் அகங்காரத்தில் அனுதினமும் நம் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்தும் இந்தத் திமுக, இனி என்றும் ஆட்சி அரியணையில் அமரக்கூடாது! வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களைக் கொல்லும்

திமுக அரசை விரட்டியடிப்போம்! தமிழகப் பெண்களைக் காப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b