Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 15 ஏப்ரல் (ஹி.ச.)
10 அணிகள் இடையிலான 19-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள
சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.
பவர்பிளே ஓவர்களில் வேகமாக ரன்கள் சேர்த்த சென்னை அணி, பின்னர் இறுதி ஓவர்களில் சற்று தடுமாறினாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் சஞ்சு 48 ரன்களும், பிரெவிஸ் 41 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர் விக்கெட்டுகளை இழந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA