Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 15 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஏப்.23ல் நடக்கும் ஓட்டுப்பதிவு அன்று தொழிலாளர்கள் ஓட்டளிக்க ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் திண்டுக்கல் மாவட்டம் தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள், கடைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட வாக்குரிமை உள்ள அனைத்து பணியாளர்களும் ஓட்டை பதிவு செய்ய தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக திண்டுக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் மலர்கொடி 95897 23235, துணை ஆய்வாளர் விமலா 99425 41411, உதவி ஆய்வாளர் கருப்பையா 99947 63201 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம் என அம்மாவட்ட தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b