பா.ஜ.க அரசு ஆங்கிலர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறது - கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர்
கோவை, 15 ஏப்ரல் (ஹி.ச.) கோவை பிரஸ் கிளப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் அறிக்கையை 10 பிரிவுகள் கொண்ட 50 விரிவான தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர், பிரியா கிருஷ்ணா M
ல்


கோவை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை பிரஸ் கிளப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் அறிக்கையை 10 பிரிவுகள் கொண்ட 50 விரிவான தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர், பிரியா கிருஷ்ணா MLA, R.L கண்ணன், கோவை சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி மற்றும் கோவை மற்றும் திருப்பூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் கூறியதாவது

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி அமைத்ததில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தது போல் தற்போது நடைமுறைப்படுத்திய வருவதாகவும் கர்நாடகாவில் மந்திரி சபை அமைந்த பிறகு கிரகலட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல கர்நாடகாவில் 1 கோடி 25 லட்சம் பெண்களுக்கு மாதம் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.திமுக ஆட்சி அமைந்த உடன் காங்கிரஸ் அறிக்கையில் இருப்பது போல பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு மக்கள் கலாச்சாரம்,பண்பு கொண்டவர்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறது.

ஆனால் பாஜக அரசு ஆங்கிலர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / Durai.J