சென்னை சத்யாநகர் பகுதியில் வாக்குறுதிகளுடன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் சேகர்பாபு
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.) துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் சேகர்பாபு சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள சத்யாநகர் பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார் அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் பூக்களை தூவி
Nn


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் சேகர்பாபு சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள சத்யாநகர் பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார்

அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் பூக்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்கின்றனர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

3 வது முறையாக துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

நான் சட்டமன்ற உறுப்பினரான பிறகு தான் இந்த பகுதியில் காங்கிரட் சாலை அமைப்பது ,கழிவறை அமைத்து தருவது, மழை காலங்களில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்கு 40 உரை கிணறுகள் அமைப்பது, என்னுடைய காலத்தில்தான் திருவிளக்குகள் அமைப்பது, சிதலமடைந்ததை நியாயவிலைக் கடைகளை புதுப்பித்து கொடுப்பது. பாதுகாப்பிற்காக என்னுடைய சொந்த செலவில் புறக்காவல் நிலையம் அமைப்பது,புதிதாக அங்கன்வாடி அமைப்பது

அதேபோல் இந்த பகுதி இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது ஆனால்

ஏ எஸ் ஐ இடம் என்பதால் பணியினை நிறுத்தச் சொல்லி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள் ஆனால் தேர்தல் முடிந்த பின் அதற்கான தீர்வினை கண்டு நிச்சயமாக விளையாட்டு மைதானம் ஒன்று அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.

இதே பகுதியில் நிரந்தர குடியிருப்பு அமைத்து தர வேண்டும் என்று எடுக்கப்பட்ட முயற்சியில் கிரவுண்ட் பிளஸ் ஒன் குடியிருப்பு மட்டுமே கட்ட முடியும் என்று தொல்லியல் துறையும் அரசும் கூறியதால் இந்த மக்களுக்கு மறு குடியமர்வு செய்ய முடியாத சூழல் உள்ளது இருந்தாலும் இதே தொகுதிக்கு உட்பட்ட வேறொரு இடத்தில் இந்த மக்களை நிரந்தர குடியிருப்பில் வசிக்க வைப்பேன் என வாக்குறுதியாக தருகிறேன்.

கொரோனா காலம் உட்பட எந்த பண்டிகையாக இருந்தாலும் நான் இந்த பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி இருக்கிறேன்.அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு உதவிகள், இந்த பகுதி மக்கள் யார் கல்லூரியில் சேர்வதற்கான உதவி கேட்டு வந்தாலும் மறுத்ததே இல்லை, கல்வி ஊக்கத்தொகை, சுயதொழில் தொடங்க ஆட்டோக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் வழங்குவது, அழகு கலை பயிற்சி, தையற்பயிற்சி, கணினி பயிற்சி, நடத்தி சான்றிதழ் மற்றும் அந்தந்த பயிற்சிக்கு ஏற்றவாறு பல்வேறு இலவச உபகரணங்கள் வழங்கியுள்ளோம். மேலும் மீன் பாடி வண்டி, தள்ளுவண்டி என்று கேட்டவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பகுதி மேம்பாட்டிற்கு தோழனாக இருப்பேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற திட்டங்களை அதிமுக வினர் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கேளுங்கள்.

தீவுத்திடலில் 120 கோடி ரூபாய் செலவில் நிரந்தரமான சுற்றுலா பொருட்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது இது செயல்பாட்டுக்கு வந்தால் நிச்சயம் குறைந்தபட்சம் 200 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன். என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ