மும்பை இசை நிகழ்ச்சியில் ‘எக்ஸ்டசி’ போதை மாத்திரை - கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
மும்பை , 15 ஏப்ரல் (ஹி.ச.) மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள நெஸ்கோ மைதானத்தில் இரவு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் தென் மும்பையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியி
M


மும்பை , 15 ஏப்ரல் (ஹி.ச.)

மகாராஷ்டிர மாநிலம்

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள நெஸ்கோ மைதானத்தில் இரவு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் தென் மும்பையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் எம்.பி.ஏ. மாணவர்கள் 15 பேரும் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது, மாணவர் ஒருவர் தனது சக மாணவர்களுக்கு ‘எக்ஸ்டசி’ போதை மாத்திரையை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதை உட்கொண்டதும் சில நிமிடங்களிலேயே மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரைகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மாணவர் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக போலீசார் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA