நீதிபதி பெயரில் போலி அடையாள அட்டை உபயோகித்த 2 பேர் கைது - துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்
புதுடெல்லி , 15 ஏப்ரல் (ஹி.ச.) டெல்லியில் போலீசார் அவ்வப்போது வாகன சோதனையை தீவிரப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நாடாளுமன்றம் தெருவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் அங்கு வந்தது.
D


புதுடெல்லி , 15 ஏப்ரல் (ஹி.ச.)

டெல்லியில் போலீசார் அவ்வப்போது வாகன சோதனையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் நாடாளுமன்றம் தெருவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் அங்கு வந்தது.

அந்த காரின் பக்கவாட்டு கண்ணாடிகள் கருப்பு நிறத்தில் இருந்ததுடன், காரின் முன்புறத்தில் ‘நீதிபதி’ என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் வைத்திருந்தது போலியான நீதிபதி அடையாள அட்டை என்பது தெரியவந்தது.

மேலும், காரில் சோதனை செய்தபோது ஒரு துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்கள் எதற்காக போலி அடையாள அட்டையுடன் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA