தேவபூமி இமாச்சலுக்கு பிரதமர் மோடி நல்வாழ்த்து
புது டெல்லி , 15 ஏப்ரல் (ஹி.ச.) இமாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு நரேந்திர மோடி மாநில மக்களுக்கு தனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று 30 சிறிய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசம் மாநிலத
D


புது டெல்லி , 15 ஏப்ரல் (ஹி.ச.)

இமாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு நரேந்திர மோடி மாநில மக்களுக்கு தனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

1948ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று 30 சிறிய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் உருவாக்க தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

“தேவபூமி” என அழைக்கப்படும் இந்த மாநிலம் பனிமலைகள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் மக்களின் துணிச்சலுக்காகப் புகழ்பெற்றது.

இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது:

இமாச்சலப் பிரதேச தின நல்வாழ்த்துக்கள் மாநில மக்களுக்கெல்லாம்.

தெய்வங்களின் புனித பூமியான இந்த மாநிலம், அதன் செழுமையான பாரம்பரியம், ஒப்பற்ற கலாச்சாரம் மற்றும் மக்களின் விடாமுயற்சி, கடமையுணர்வு, பணிவு ஆகியவற்றால் தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளது.

இந்த மங்களகரமான நாளில், மாநிலத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA