இன்று அசாமிய புத்தாண்டான ரோங்காலி பிஹு திருநாள் - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
புதுடெல்லி , 15 ஏப்ரல் (ஹி.ச.) அசாமின் மிக முக்கியமான மற்றும் புனிதமான திருவிழாக்களில் ஒன்றான ரோங்காலி பிஹு, வசந்த காலத்தின் வருகையையும் வேளாண் பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. பாரம்பரிய பாடல்கள், விருந்துகள், சமூகக் கூட்டங்களுடன் கொண்டா
இன்று அசாமிய புத்தாண்டான ரோங்காலி பிஹு திருநாள் - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


புதுடெல்லி , 15 ஏப்ரல் (ஹி.ச.)

அசாமின் மிக முக்கியமான மற்றும் புனிதமான திருவிழாக்களில் ஒன்றான ரோங்காலி பிஹு, வசந்த காலத்தின் வருகையையும் வேளாண் பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

பாரம்பரிய பாடல்கள், விருந்துகள், சமூகக் கூட்டங்களுடன் கொண்டாடப்படும் இத்திருவிழா, குறிப்பாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி, புதுப்பித்தல் மற்றும் வேளாண் செழிப்புக்கான நம்பிக்கையை அளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, அசாமிய புத்தாண்டான ரோங்காலி பிஹு

திருநாளையொட்டி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது,

அனைவருக்கும் ரோங்காலி பிஹு வாழ்த்துகள்!

இந்த துடிப்பான திருவிழா புதிய தொடக்கங்கள், செழிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வைக் கொண்டாடுகிறது. இத்திருவிழா அசாமிய கலாசாரத்தை அழகாக வெளிப்படுத்துகிறது, இது தற்போது நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. வெற்றி, மகிழ்ச்சி மற்றும் சிறந்த ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b