Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 15 ஏப்ரல் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட தக்காளி சந்தை பகுதியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நடைபயிற்சியுடன் இணைந்து தக்காளி சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் ஆதரவு கோரி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரசாரத்தில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரும் உடன் சென்றார்.
வீதிவீதியாக நடந்துசென்று மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சருடன் பொதுமக்கள் கைகுலுக்கியும், செல்பி எடுத்தும் உற்சாகம் காட்டினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களுடன் நேரடி தொடர்பை அதிகரிக்கும் வகையில் முதலமைச்சர் இந்த நடைபயிற்சி பிரசாரத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam