தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு இன்று தபால் வாக்குப்பதிவு
ஈரோடு, 15 ஏப்ரல் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், 2,379 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில், 11,420 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று காலை, 1
Postal voting for officials


ஈரோடு, 15 ஏப்ரல் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், 2,379 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில், 11,420 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர்.

இவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று காலை, 10:00 மணி அளவில் தொடங்கியது. இந்த பயிற்சியானது மாலை, 5:00 மணி வரை நடைபெற உள்ளது.

தொகுதி வாரியாக, ஈரோடு மேற்கு -ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஈரோடு கிழக்கு - ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம், மொடக்குறிச்சி-மொடக்குறிச்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை-பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவானி - பவானி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர்- அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளி, கோபி - கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர்- சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லுாரியில் பயிற்சி வகுப்பு நடைபெறுகின்றன.

பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் அனைத்து நிலை ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இன்று தபால் ஓட்டு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஏதேனும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து தபால் ஓட்டை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b