நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ தொடக்கம்
கன்னியாகுமரி, 15 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்
Prime Minister Modi's roadshow begins in Nagercoil.


கன்னியாகுமரி, 15 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த வரிசையில், தமிழ்நாட்டில் அ. தி. மு. க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார்.

இதற்காக, டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி அங்கிருந்து, இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, மாலை 4.10 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தார்.

இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள ஹெலிபேடில் இருந்து வேப்பமூடு பகுதிக்கு மாலை 4.15 மணிக்கு பிரதமர் மோடியின் ரோட் ஷோ தொடங்கியது.

வேப்பமூடில் இருந்து வடசேரிக்கு சுமார் 1 கி. மீ. தூரத்தில் நடைபெறும் பிரமாண்டமான சாலை நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்ற்றுள்ளார்.

மாலை 5:30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ரோடு ஷோ வாகனத்தில் பிரதமரின் ஒருபக்கத்தில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறுபக்கம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

என்டிஏ வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி கை அசைத்தபடி வாகனத்தில் வந்து கொண்டிருக்கின்றார்.

வழி நெடுகிலும் மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மலர்களை துாவி, பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்பியபடி அவரை பொதுமக்களும் பாஜக தொண்டர்களுக்கும் வரவேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b