Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் முக்கியமான மாற்றமாக, அமைச்சரவையில் புதிய துணை முதலமைச்சர் (Deputy Chief Minister) பதவி உருவாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது என். ரங்கசாமி தலைமையிலான அரசில், கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்த பதவி கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
கூட்டணி அரசில் அதிகார சமநிலையை பேணவும், அரசியல் சமரசத்தை ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் இதுவரை துணை முதலமைச்சர் பதவி இல்லாத நிலையில், இது நடைமுறைக்கு வந்தால் அரசியல் ரீதியாக பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போதைக்கு ஆலோசனை மட்டுமே நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P