Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
அதிமுக கூட்டணியுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்கும் தமிழக பாஜகவின் சார்பில் கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நிறுத்தப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டது.
அதன் பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக திடீரென அலர்ஜி ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
டெல்லியின் முதல்-மந்திரி திருமதி. ரேகா குப்தா, இன்று என்னை சந்தித்து எனது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
நான் விரைவில் குணமடைய அவர் தெரிவித்த நல்வாழ்த்துகளுக்கும், செய்த பிரார்த்தனைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் பிரச்சார பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி கோவைக்கு வருகை தந்தமைக்கும், அவர் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்கும் நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b