திமுக ஊழலுக்கு பேர் போனது, கலைஞர் எங்கிருந்தாலும் வருத்தப்படுவார் - குஷ்பூ
மதுரை, 15 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக பாரதிய ஜனதா துணைத் தலைவர், நடிகை குஷ்பூ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் அரசு திட்டங்கள் எதுவுமே செயல்படாத நிலை குறித்த க
Khushboo


மதுரை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக பாரதிய ஜனதா துணைத் தலைவர், நடிகை குஷ்பூ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் அரசு திட்டங்கள் எதுவுமே செயல்படாத நிலை குறித்த கேள்விக்கு,

அங்கு போய் நீங்க நேரில் சென்று பார்த்தீர்களா? அங்குள்ள நிலைமை எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்று தெரியும், என்றார்.

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர்.சி குறித்து தனிப்பட்ட விமர்சனம் கேள்விக்கு,

நானும் சுந்தர்.சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் என்ன வளர்ச்சி உள்ளது என்று வெள்ளை அறிக்கை தான் கேட்கிறோம். மெட்ரோ திட்டத்திற்கு தெளிவான அறிக்கை தான் கேட்கிறோம். இப்போது வரைக்கும் கொடுக்கவில்லை.

மம்தா பானர்ஜி வாக்களிப்பவர்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என வீடியோ வைத்திருக்கிறோம் சொல்வது முதலமைச்சர் பேசும் பேச்சா. மிரட்டும் அளவுக்கு தான் உள்ளதா?

முதலமைச்சர் பேசும் பேச்சை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. எங்களை பார்த்து படிக்காதவர்கள் என்று சொன்னார்கள். அது உண்மைதான். ஆனால் வளர்ப்பு சரியாக உள்ளது.

திமுகவில் இருப்பவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் எங்கிருந்து வந்தார்கள்?

திரைக்குப் பின்னால் உழைப்பாளிகள் உள்ளனர் அது வீணாவது மிகுந்த கஷ்டம் அளிக்கிறது. எந்தப் படமாக இருந்தாலும் லீக் பண்ணுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்.என்றார்.

திமுக காங்கிரஸ் இணக்கமாக உள்ளார்களா? என்ற கேள்விக்கு,

ஏன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வரவில்லை என முதல்வர் தான் கேட்க வேண்டும். அப்படி கூறினால் ஊழலை பற்றி புட்டு புட்டு வைத்து விடுவார்கள் அவர்கள். திமுக ஊழலுக்கு பேர் போனது.

கலைஞர் உருவாக்கிய கட்சி எங்கிருந்து அவர் பார்த்தாலும் வருத்தப்படுவார்.

நீட்டுக்காக குரல் கொடுக்கும் திமுக, அதை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது. அப்போது ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்கிறார்கள்.

கட்சியிலிருந்து வெளியே வந்ததற்கு எனக்கு சுயமரியாதை முக்கியம். உங்களை ஏன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கினார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவரும் நடிகை குஷ்பு கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN