Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 15 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் பாரதிபுரதில் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார், நெசவாளர் வீட்டிற்கு சென்று தறி நெய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை சொல்லியும், தனக்கு வாக்களித்தால், திண்டுக்கல் தொகுதிக்கு செய்யும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
இன்று பாரதிபுரம் சென்ற வேட்பாளர் செந்தில்குமார் அங்குள்ள நெசவாளர்கள் மத்தியில் ஓட்டு சேகரிக்கும் போது, தறியில் அமர்ந்து நெசவு நெய்தபடி வாக்குகள் சேகரித்தார்.
அதன் பின்னர் கலைஞர் நகர், டிப்போ ரோடு, சந்தைரோடு பள்ளிவாசல், அண்ணாமலையர் பள்ளி சாலை உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்று வாக்குகள் சேகரித்தார்.
உடன் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா.முத்தரசன் இணைந்து வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய முத்தரசன் சொல்லாததையும் செய்வோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என உரிமையோடு கேட்கின்றோம். எடப்பாடி பழனிசாமி சிக்க கூடாத இடத்தில் சிக்கி விட்டார்.
சம்பந்தி வழக்கு முடிக்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி வஞ்சகன் மோடியடா என்று பாட்டுப்பாடி வாக்குகள் சேகரித்தார்.
தொடர்ந்து பேசிய முத்தரசன் அதிமுகவுக்கு போடக்கூடிய ஓட்டு பிஜேபிக்கு போடக்கூடிய ஓட்டாகும் அது நாட்டைக் காப்பாற்றது தமிழகத்தை காப்பாத்தாது உங்கள் உரிமையை காப்பாத்தாது ஆகவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
திமுக வெற்றி வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் அதிக ஓட்டு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற வேண்டும்
என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN