Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 15 ஏப்ரல் (ஹி.ச.)
கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா, சங்கிலிகுப்பம் பகுதியில் மாவட்ட நிர்வாகி சுரேஷ் என்கிற ஆர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த திமுக ஆட்சியில் 505 தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டன.
திமுக ஆட்சி வந்தவுடன் கரண்ட் பில் அதிகரிக்கப்பட்டது அம்மா இருந்தபோது மக ப்பேறு உதவித்தொகை 18000 வழங்கப்பட்டது.
நாம் வந்தால் அதனை 24,000 ஆக உயர்த்துவோம்.
ஒரு லட்சம் ஆடு மாடு கோழி மக்களுக்கு வழங்கப்படும் கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டப்படும். முதியோர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆறுகள் குளங்கள் தூர்வாரப்படும். பழைய பேருந்துகளுக்கு மாற்றாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழக முழுவதும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அது நிரப்பப்படும்.
மீனவர்கள் மீன் பிடிக்கும் போது உயிர் சேதம் ஏற்பட்டால் 25 லட்சம் இன்சூரன்ஸ் மூலம் வழங்கப்படும். நம்முடைய ஆட்சி வந்த உடன் மேற்கண்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்
தமிழக காவல்துறையில் எந்தவித அரசியல் தலையிடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுத்தபட்டு ஸ்காட்லாந்து யாடு இணையான தமிழக காவல்துறை செயல்படுத்தப்படும்
நகரிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் கடலூரில் அமைக்கப்படும் என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN