Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 15 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி தமிழகம் வந்தார்.
ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி, நாகர்கோயில் வந்தடைந்தார்.
அதன்பிறகு, மாலை 4.30 மணியில் வெப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தினார்.
அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
ரோட் ஷோ முடிந்த பிறகு, மாலை 5.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்படுகிறார்.
திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி புறப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN