தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடை-நள்ளிரவு முதல் அமல்:
சென்னை , 15 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், 1983-ன் கீழ் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யு
C


சென்னை , 15 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், 1983-ன் கீழ் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் முக்கிய காலமாக இருப்பதால், இந்த காலத்தில் கடலுக்கு ‘ஓய்வு’ அளிக்கப்படுகிறது.

இதன்படி, ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசைப்படகுகளின் எந்திர இரைச்சல் மற்றும் ராட்சத வலைகள் காரணமாக மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்காலத்தில் சிறிய மீன் குஞ்சுகள் பாதுகாக்கப்பட்டு, வருங்காலங்களில் மீன் வளம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தடை காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்வரத்து குறையும் நிலையில், சந்தைகளில் மீன் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA