ரேவந்த் ரெட்டியிடம் கட்டுப்பாடு இழந்த காங்கிரஸ் - ஜீவன் ரெட்டி குற்றச்சாட்டு
ஹைதராபாத் , 15 ஏப்ரல் (ஹி.ச.) காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி ஹைதராபாத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– காங்கிரஸ் கட்சி தற்போது ரேவந்த் ரெட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறிவிட்டது. கட்சி
T


ஹைதராபாத் , 15 ஏப்ரல் (ஹி.ச.)

காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி

ஹைதராபாத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி

அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் கட்சி தற்போது ரேவந்த் ரெட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறிவிட்டது.

கட்சியின் மீது முழு ஆதிக்கம் செலுத்தும் ரேவந்த் ரெட்டி, எம்.எல்.ஏ.க்களுக்கு கூட நேரம் ஒதுக்கவில்லை. அவர்களை சந்திக்க கூட அபாயின்மெண்ட் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அவரது கட்டுப்பாட்டில் சீரழிந்து வருகிறது. இது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முன்னாள் முதல்-மந்திரி கே.சி.ஆர். என் வயதை மதித்து ‘அண்ணா’ என்று அழைப்பார். மக்களிடம் மரியாதை கொண்டவர்.

ஆனால், ரேவந்த் ரெட்டி அப்படிப்பட்டவர் அல்ல.

நான் பி.ஆர்.எஸ். கட்சியில் சேர விருப்பம் கொண்டுள்ளேன்.

இறுதி வரை மக்களுக்காக போராடுவேன் என்று அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA