நாகர்கோவிலில் இன்று ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி!
கன்னியாகுமரி, 15 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். இதற்கான பயணத்திட்டத்தின் படி, இன்று பிற்பகல் 3.30 மண
மோடி


கன்னியாகுமரி, 15 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.

இதற்கான பயணத்திட்டத்தின் படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, மாலை 4.10 மணிக்கு நாகர்கோவில் வர உள்ளார்.

மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் இருந்து வெப்பமூடு சந்திப்பிற்கு பிரதமர் காரில் வருவார் எனக் கூறப்படுகிறது.

அதன்பிறகு, மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை வெப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோட் ஷோ செல்ல உள்ளார்.

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பார். ரோட் ஷோ முடிந்த பிறகு, மாலை 5.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திருவனந்தபுரம் புறப்படுகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி புறப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கன்னியாகுமாரி நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் சாலை வலம் வரக்கூடிய பாதையை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P