ரூ.8,000 கூப்பன் விநியோகம் – தேர்தல் ஆணையத்தில் திமுக மீது அதிமுக புகார்
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மீது அதிமுக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
அதிமுகவில்


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மீது அதிமுக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் சீரியல் எண்களுடன் கூடிய கூப்பன்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருவதாக அதிமுக தெரிவித்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதோடு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூப்பன்கள் மூலம் வாக்குகளை ஈர்க்க முயற்சி நடைபெறுவதாகவும், வழங்கப்பட்ட கூப்பன்களை உடனடியாக பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P