Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது என்றும் தேர்தல் கேரளா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் நிறைவடைந்துள்ளது என்றும் ஆனால் தமிழ்நாடு மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பை அவசர அவசரமா செய்ய வேண்டிய தேவையே இல்லை என்றும் கூறினார்.
மேலும் இது நிதானமா விவாதிச்சு
செய்ய வேண்டிய வேலை என்ற சீமான், எப்பவுமே பாஜக இப்படி திட்டமிட்டு ஒவ்வொன்றையும்
திருப்பும் என்றும் தெரிவித்தார்.
முதலில் CAA, NRC NIA எஸ்ஐஆர் சிறப்பு வாக்காளர் திருத்தம் என பல விவகாரங்களை சீமான் சுட்டிக்காட்டினார்.
இந்த மாதிரி வேலைகளை கொண்டு வந்து மக்களை எப்பவுமே ஒரு பதட்டத்துல
வைத்திருப்பதாகவும் சீமான் சாடினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam