சென்னை எழும்பூர், தி.நகரில்உட்பட 6 இடங்களில் விஜய் இன்று பரப்புரை
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட உள்ளது. இதற்காக விஜய் சென்னை, பெரம்பூர், திருச்சி ,மதுரை, தூத்து
விஜய்


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட உள்ளது.

இதற்காக விஜய் சென்னை, பெரம்பூர், திருச்சி ,மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே இல்லாத நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கும், விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

இந்த நிலையில், இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வேண்டி காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், டி நகர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க காவல்துறையினரிடம் மனு அளித்தது.

ஆனால் வில்லிவாக்கம் மற்றும் டி.நகரில் மட்டும் ஒரு மணி நேரம் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து விஜய் அந்த பிரச்சார கூட்டத்தை ரத்து செய்தார்.

இந்த சூழலில் விஜய் சென்னை எழும்பூர் டி நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல் துறையினர் அனுமதி வழங்கிய உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை நான்கு மணி முதல் 5 மணி வரை தியாகராய நகரில் விஜய் பரப்புரை மேற்கொள்ள 27 நிபந்தனைகளுடன் காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

அதேபோல் இன்று மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை எழும்பூரில் விஜய் பரப்புரை செய்ய 20 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கிய உள்ளனர்.

இதனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P