சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கவே விஜய் பா.ஜ.க-வால் களமிறக்கப்பட்டார் - திருமாவளவன்
கடலூர், 15 ஏப்ரல் (ஹி.ச.) கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, சோழத்தரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், விசிக தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் ஜோதிமண
திருமாவளவன்


கடலூர், 15 ஏப்ரல் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு

உட்பட்ட நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, சோழத்தரம் உள்ளிட்ட கிராம

பகுதிகளில், விசிக தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டார்.

பாளையங்கோட்டை பகுதியில் திறந்த வாகனத்தில் இருந்தபடி பேசிய அவர்,

தவெக தலைவர்

விஜய் குறித்து பேசும்போது,

விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர்

பதவியிலிருந்து இறக்குவதையே ஒரு கொள்கையாக பேசிக்கொண்டிருப்பதாகவும்

திமுகவிற்கு செல்லும் கிறிஸ்தவ, இஸ்லாமிய ஓட்டுகளை பிரிப்பதற்காகவே பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் என்றும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் பாஜகவின் சூழ்ச்சியை சிறுபான்மை சமூகத்தினர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவர், ஊருக்கு ஐந்து ஓட்டுகளை களைந்தாலும் அது விரையம் தான் என்றார்.

இதனையடுத்து அதிமுகவை விமர்சித்து பேசிய அவர்,

மறைந்த எம்ஜிஆர் கண்ட,

இரட்டை இலை இது இல்லை என்றும் ஜெயலலிதா அவர்களை வெற்றிபெற செய்த இரட்டை இலை சின்னம்

இது இல்லை, இது பாஜகவின் சின்னமாக தற்போது மாறிப்போய் பல காலம் ஆகிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானால் அது பாஜக தலைமையிலான தமிழ்நாட்டை உருவாக்கும் என்றும் இது சிறுபான்மை, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு

எதிராக அமையும் என்றும் அச்சம் தெரிவித்தார்.

சமூக நிதி கட்டமைப்புகளை சிதைக்கும், சாதிச் சண்டை, மதச்சண்டை

ஆகியவைகள் பெருகும் என்றும் திருமாவளவன் ஆரூடம் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P