Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் இன்று சென்னை நகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதற்கான முழுமையான பாதை மற்றும் நேர விவரங்களை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
விஜய் அவர்கள், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு, ராஜ்பவன் வழியாக சின்னமலை, அண்ணாசாலை, சிஐடி நகர் 1வது பிரதான சாலை, அன்பழகன் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பயணம் மேற்கொள்கிறார்.
இதன் பின்னர், தி நகர் காவல் மாவட்ட எல்லையான தெற்கு உஸ்மான் சாலை – வேம்புலி அம்மன் கோவில் சந்திப்பில் இடது புறமாக திரும்பி, நியூ போக் சாலை வழியாக முத்துரங்கன் சாலை – நியூ போக் சாலை சந்திப்பை அடைகிறார். அங்கு வாகனத்திலிருந்து இறங்கி பொதுமக்களுடன் நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
பரப்புரை நிறைவடைந்ததும், மீண்டும் நியூ போக் சாலை வழியாகவே திரும்பி, வேம்புலி அம்மன் கோவில் சந்திப்பில் இடது புறமாக திரும்பி தெற்கு உஸ்மான் சாலை, தி நகர் பேருந்து நிலையம், தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே சென்று, அன்பழகன் மேம்பாலம் ஏறி வடக்கு உஸ்மான் சாலை வழியாக நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்காவை அடைகிறார். அங்கு மேலும் ஒரு கட்டமாக பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த முழு தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ